பருவமழைக்காலம் இது கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது மட்டக்களப்பு மாவட்டத்தில்.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ்நிலப் பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பாரிய வெள்ள அபாய நிலமை இல்லை, ஆற்றுவாய் வெட்டப்பட்டிருக்கிறது.
இதேவேளை மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதோடு, சில குடியிருப்பு பகுதிகளில் நீர் உட்சென்றுள்ளதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது, குடும்பங்கள் சில இடம்பெயர்ந்துள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் கனரக வாகனங்கள் மூலம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க நீரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் மாநகர அனர்த்த முகாமைத்துவ குழுவினரும், மாநகரசபை உறுப்பினர்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த வெள்ள நிலமைக்கு சிலநபர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், மட்டக்களப்பு மாநகர முதல்வரையும், திட்டித்தீர்த்து காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளிலும் , பாதைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது, வடிந்தோட வழியில்லாது காரணம் என்ன? கடந்த காலங்களில் இந்த வெள்ளநிலமை ஏற்படவில்லையா? அப்போதெல்லாம் இப்படி பேசுபொருளாகவில்லையே?
நிச்சயமாக மட்டக்களப்பு நகர் பகுதிகளில் ஏற்படும் இந்த வெள்ளநிலமைகள் புதிதி ல்லை இப்போது மட்டும் பேசப்படுகிறது என்றால் தமிழ்தேசிய கூட்டமைப்பை மக்கள் தமது பிரதிநிதிகளாக இன்னும் முழுவீச்சாக ஏற்றுக்கொள்கின்றமையா?
மாநகர சபை அதன் முதல்வர் தமது பிரச்சினைக்கு தீர்வு தருவார் தரவேண்டும் என்ற மிகுந்த நம்பிக்கை தான் காரணமா ?
அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபை இயன்றவரையில் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கிவருகிறமையை காணக்கூடியதாகவுமுள்ளது.
மாநகர சபை , பிரதேச செயலகங்களினதும், மாவட்ட செயலகங்களினதும் அதிகாரமும், செயற்பாடும் தெரியாத வகையில் மக்கள் உள்ளனரா அல்லது பிழையாக வழிநடத்தப்படுகின்றனரா என்ற கேள்வியும் ஒன்றுள்ளது.
மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன அவைகளை பிரதேச செயலாளர் உட்பட்ட பிரதேச செயலகமே மேற்கொண்டு வருகிறது.
கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டு வரும் சிலரின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப மாநகர முதல்வர் நடவடிக்கை எடுத்தால் பாரிய பிரச்சினைகள் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தலைதூக்கும், இதனை சம்மந்தப்பட்ட தரப்பினர் முகம்கொடுக்க தயாரா என்ற வினாவும் உண்டு, அந்த நிலமையை சமாளிக்க தனது புத்திசாதுர்யமான மனிதநேய பண்போடு கையாண்டு வரும் முதல்வர் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.
01.மழைநீர் நிலத்தடிநீராக நிலம் உறிஞ்ச அல்லது , வழிந்தோட முடியாது குடியிருப்புக்களில் சீமெந்து கற்கள், சீமெந்து தரைகள் தடை.
02. பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு சுற்று மதில்களிவ் 80% மானவை அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டிருக்கிறது .
அதனால் வடிகான்கள் அமைக்க , வாய்க்கால்கள் வெட்ட வழியில்லை.
அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட மதில்களும் 95 % சரியான முறையாக நிர்மானிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட குடியிருப்புக்குள் தேங்கும் மழைநீரே வழிந்தேட வழியில்லாது வீட்டுக்குள் வெள்ளநீராக புகுந்துள்ளது, இதற்கு யார்காரணம்?
இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய உண்மைச் சம்பவம் வெள்ள நீர் தேங்கி வடிந்தோட தடையாக இருந்த புதிதாக கட்டப்பட்ட சுற்றுமதில்கள் சில நேற்றுமுன்தினம் அடியோடு இடிந்துள்ளது இதனால் ஆறுகுடும்பங்கள் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கின்றன.
இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வென்றால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 60% சுற்று மதில்கள் அனைத்தையும் இடித்து தள்ளினாலே போதும்.
இதனை எதிர்கொள்ள அல்லது அனுமதிக்க
மக்கள் தயாரா?
மக்கள் தயாரா?
மேலும் போக்குவரத்து பாதைகள் கெங்கிறிட் வீதிகளாக மாற்றப்பட்டதனால் வீதிகள் உயர்ந்துள்ளன மக்களின் குடியிருப்பு நிலங்கள் தாழ்வாகியுள்ளது, இதனால் வீதியால் வழிந்தோடி ஆற்றிலோ குளத்திலோ சேரவேண்டிய நீர் குடியிருப்புக்களில் தேங்குகி நிற்கின்றன.
வீடுகளை அமைக்கும் போது வீதிமட்டம் பார்த்து முறையாக அனுமதி பெற்று அமைத்திருந்தால் கூட நிலமை மோசமாயிருக்காது.
இப்போது வீதிகளை உடைத்து தோண்டி நீரினை தற்காலிகமாக வெளியேற்றவே அனைவரும் வருகின்றனர் ,
தமது வளவில் காணியில் ஒரிரு அடி விட்டுக்கொடுத்து சுற்றுமதிலையோ, வேலியினையே உட்புறமாக அமைத்து வடிகான்களை அமைக்க ஒத்துழைப்பு வழங்க முன்வருவார் யாருமில்லை.
அதுமாத்திரமின்றி வெள்ளகால அனர்த்தகால உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கையாளவேண்டியது மாவட்டசெயலகம், அங்குதான் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உள்ளது,.
மாவட்ட செயலகத்தோடு இணைந்து மாநாகரசபை பல திட்டமிடல்களை செய்திருக்கிறது அதன் மூலம் நிதிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆனால் நடைமுறைப்படுத்தப்படும் போது மாநாகர சபைக்கு அழைப்பில்லை என்பதும் உண்மை.
இவ்வாறான நிலமைகளுக்கு மத்தியில் மாநகர சபை முறையற்ற செயற்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதா? அல்லது மாநகர சபை தன்னால் முடிந்த அனர்த்த அபாய குறைப்பு, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.