மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை.





மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 14வது ஆண்டு்நினைவு  நிகழ்வு நாளை புதன்கிழமை (25.12) மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் உள்ள  கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.



2005.12.25ம் திகதி அதிகாலை  மட்டக்களப்பு புனிதமேரி தேவாலயத்தில்  நத்தார் நள்ளிரவு திருப்பலி   ஆராதனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஆயுததாரிகளால் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார் ஜோசப்பரராஜசிங்கம்,  அன்னாரின் படுகொலை தமிழ் மக்களிற்கு மாத்திரமல்லாது ஜக்கியத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்க்கு முன்னின்று உழைத்த தலைவர்களுல் ஒருவராக   மாமனிதராக கெளரவிக்கப்பட்ட அன்னாரின் 14 வது ஆண்டு நிறைவு தினத்தை அனுஷ்டிக்கும் நினைவு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்  வாலிபர் முன்னணி தலைவர் லோ.திபாகரன் தலைமையில் இம் முறை நடைபெறவுள்ளது.


1934ம் வருடம் கார்த்திகை மாதம் இருபத்தியாறம் திகதி பிறந்த அன்னார் இறக்கும் போது வயது எழுபத்தி ஒன்று, ஜோசப்பரராஜசிங்கம் அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள் உட்பட ஒரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் மகன் சிறுவயதில் இயற்கையெய்தியமை குறிப்பிடத்தக்கது.


1960களில் தமிழரசு கட்சியில் இணைந்து கொண்ட இவர் பத்திரிகை துறையிலும் அதிகம்  ஈடுபாடுகொண்டிருந்தார். அறவழியில் போராடி தமிழ் மக்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்க்காக ஜக்கிய நாடுகள் சபை வரை உரக்க குரல் கொடுத்த அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்றால் மறுக்க முடியாது.