மட்டக்களப்பு மாநகரசபையின் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வு –மகிழ்ச்சியில் மாணவர்கள்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முப்பெரு விழாவாக சிறப்பான முறையில் ஓழங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் நூலகம் மற்றும் மக்கள் மேம்பாட்டு குழுவின் தலைவருமான வே.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய பிரதிகல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நூலகங்களில் சிறந்த வாசகர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நூலகங்களுக்கு நூல்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கோத்தபாயவினை ஆதரவிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்,மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் மீள ஆரம்பிக்கப்படும்,தொழில்வாய்ப்புகளை கருத்தில்கொண்டு தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என பொதுஜன ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் அவை நிறைவேற்றப்படும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.