மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பங்களை தலைமைதாங்கும் மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு விடுத்து வேண்டுகோளி; அடிப்படையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயகத்தினால் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கோப்பாவெளி,கித்துள்,சர்வோதயநகர்.வெலிக்காகண்டி,உறுகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பத்தினை தலைமைதாங்கும் மற்றும் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஊடகவியலாளர் பூ.சசிகரனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயகத்தின் வடகிழக்கு பெண்கள் திட்ட இணைப்பாளர் ரவீனா ஹசந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் 25 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் பயிர் விதைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் சசிகரன் உட்பட அதிதிகள் அப்பகுதி மக்களினால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மக்கள் தங்களது உணர்வுகளை இம்முறை ஜனாதிபதி தேர்தல் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் அ.ஜேசுதாசன் தெரிவித்தார்.