கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

கதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையொன்று புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையேற்பட்டுள்ளது.

இன்று இரவு அமிர்தகழி கதிர்காம வீதியில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதியிலேயே இந்த முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளதன் காரணமாக குறித்த முதலையினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் மற்றும் மாநகரசபை ஊழியர்கள்,அப்பகுதி இளைஞர்கள் குறித்த முதலையினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.