கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

ஊருக்குள் நுழைந்த இராட்சத முதலை : மடக்கி பிடித்த இளைஞர்கள்

மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையொன்று புகுந்ததன்காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையேற்பட்டது.

இன்று இரவு (09.11) பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமானஓர் ராட்சத முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் இருந்தனர்

இதனை தொடர்ந்து பிரதேச இளைஞர்களின் துணிகர முயற்சியால் இரண்டு மணி நேரபோராட்டத்திற்குப் பின் குறித்த இராட்சத முதலை பிடிக்கப்பட்டு பின் வன ஜீவராசிகள்திணைக்களத்தின் அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதுடன் கால்நடைகள் பலவும் காணமல் போய் வருவதும் குறிப்பிடத்தக்கது