ஏழு தேசிய விருது பெற்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர்

இலங்கையின் முதல் இலத்திரனியில் தொலைக்காட்சி என்ற பெருமையினைக்கொண்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஸ்ட தயாரிப்பாளராகவும் தற்காலிக பணிப்பாளராக கடமையாற்றும் மட்டக்களப்பினை சேர்ந்த சுப்பிரமணியம் கோணேஸ் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் தேசிய விருதினைப்பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான கோணேஸ் தேசிய தொலைக்காட்சியான நேத்ராவில் ஊடக பணியை ஆரம்பித்து சக்தி மற்றும் வசந்தம் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக கடமையாற்றிவருகின்றார்.

அண்மையில் நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவில் சுப்பிரமணியம் கோணேஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பல கோணங்களில் கமராக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியை தயாரித்தமைக்காக இந்த விருது வழங்கிவைக்கப்பட்டது.

கோணேஸ் அவர்கள் தேசிய அரச விருது வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக ஏழு வருடங்களாக தேசிய விருதினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய விருதினை தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் பெற்ற தமிழ் என்ற பெருமையினை மட்டக்களப்புக்கு சேர்த்துள்ள கோணேஸ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.