மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.


மட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில்  மகத்தான சேவையாற்றும் 
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சித்தாண்டி   கிராமத்தில்
அமைந்துள்ளது சிறி முருகன் முறிவு வைத்தியசாலை.


இவ் முறிவு  வைத்தியசாலையானது சித்தர்கள் அருளிய ஆயுள்வேத  முறையினை கொண்டு பொன்னுத்துரை கருணாகரன் என்பவரினால் பரம்பரையாக இடம் பெற்று தற்போதும் இவரது பரம்பரையாக கருணாகரன் சோபனன் எனும் அவரது மகனுடன் 50ஆண்டுகளுக்கு மேலாக  அரியபணி ஆற்றி வருகிறது .


மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில்  முறிவு வைத்தியத்தில்  மகத்தான சேவையாற்றும் சிறி முருகன் வைத்தியசாலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சித்தாண்டி   கிராமத்தில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது. 


தமிழனின் பண்டைய கலைகளில் ஒன்றான முறிவு வைத்தியத்தை பணத்தினை  முதன்மைபடுத்தி  செய்யாமல் சேவை நோக்காகவே இப்பரம்பரையால் செய்யப்படுகின்றது.


அதுமட்டும் இன்றி மட்டக்களப்பில் பல இடங்களிலும் இருந்து பொதுமக்கள் முடிவுக்கான சிகிச்சைக்கு வருவது மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகின்றமை மட்டக்களப்புக்கு பெருமையாகும் .


இவர்களது சேவையை பாராட்டி செங்கலடி பிரதேச செயலகம் உட்பட   பல்வேறு பொது அமைப்புக்களும் கெளரவிப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்து.