பெரியகல்லாறில் கல்வி கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி விருத்திக்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் கீழ் இயங்கும் பெரியகல்லாறு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த கா.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று பெரியகல்லாறில் நடைபெற்றது.

பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலய கலாசார மண்டபத்தில் பெரியகல்லாறு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய தலைவர் க.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் பெரியகல்லாறு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய மற்றும் கோல்டன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெரியகல்லாறு,கோட்டைக்கல்லாறு,துறைநீலாவணை ஆகிய பகுதிகளைச்சேர்த கா.பொ.த.சாதார தரம் கல்வி பயிலும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் ஆலோசனையின் கீழ் இவ்வாறான இவ்வாறான கருத்தரங்குகளை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.