சென்று வா தங்கையே இயங்கா நிலை வரை இயங்கிய அசாத்திய மனவலிமை கொண்ட பெண்மணி


தங்கேஸ்வரியை நான் 1968 இலிருந்து அறிவேன் அப்போது அவர் வின்சன்ட் பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் படித்துகொண்டிருந்தார்.என் தங்கையும் அங்கு படித்தார்.அப்போதுதான் திரவியம் இராமசந்திரா அங்கு உப அதிபராக இருந்து கலைப்பணி செய்து கொண்டிருந்தார்.

அவர்களுடன் இணையும் வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது. தங்கேஸ்வரி என்ற அந்தத் துடுக்கான சிறுமியும் எனக்கு அறிமுகமானாள் படபடவென்று பேசுவாள் துரு துருவென்றிருப்பாள் என் தங்கை கோகிலாவின் தோழியான அவள் என் தங்கையும் ஆனாள் பாடசாலைச் சிறுமியாக இருந்து  அம்மணியாக மாறியவரை அவரை அருகிலிருந்து அவதானிக்கவும் அவருடன் இணைந்து வேலை செய்யவுமான பல சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன.
மட்டக்களப்பு வரலாற்றுக்கு ஆதாரமான தொல்லியல் சான்றுகளை முதன் முதலில் ஒரு ஒழுங்கு நெறிக்கேற்பத் தேடி வெளிக் கொணர்ந்ததும்
அவை பற்றி ஓயாது பேசியும் எழுதியும் வந்த தும் அவரின் வாழ்நாள் பணிகள் ஆகின
மட்டக்கள்புப் பண்பாட்டின் அடித்தளங்களான
கோவில்கள்
சடங்குகள்
கூத்துகள்,
கலைகள்
வாழ்வியல்
என்பனவற்றில்
ஒரு வெறித்தனமான ஆர்வம் கொண்டிருந்தார்.
அதனை நோக்கியே பயணம் செய்தார்
அந்த தீவிரமே அவரை கடைசிவரை இயக்கியது
அந்தப் பயணத்தில் அவர்
கலாசார உத்தியோகாஸ்தராகவும்
சமூக சேவகியாகவும்
அரசியல் வாதியாகவும்
ஆக வேண்டி வந்த து
கலாசார உத்தியோகஸ்தராகி அப்பதவிக்கு ஒரு அர்த்தம் தந்தார்
அவ் அர்த்ததின் மறு பெயர் செயற்பாடு
மட்டக்களபுக் கூத்துகளை
ஆவணமாக்கல்,
கூத்துக்கலைஞர்களின் பேட்டிகள்
என கலசார உத்தியோகஸ்தராக இருந்து அவர் வெளியிட்ட
12 இறு வட்டுகள் மிகப் பிரதானமான ஆவணங்கள்
மட்டக்களபுக் கச்சேரிக்குள் மட்டக்கள்ப்பு சம்பந்தமான
ஒரு அரும் பொருட் காசிச்சாலை
அமைத்தல் என்பது அவரது
செயற்பாடுகளில் ஒன்று
அதற்கான ஆரம்ப முயற்சிகளும் செய்திருந்தார்
ஆனால் அது காரிய சாத்தியமாகவில்லை
இன்று கலசார உத்தியோகஸ்தர்களாகப் பணிபுரியும் இளம் தலமுறை எத்தனை பேருக்கு இவை எல்லாம்தெரியுமோ என எனக்குத் தெரியாது
ஓயாது பேசும் பெண் மணி அவர்
ஓயாது இயங்கும் பெண்மணி அவர்
காலில் சக்கரம் பூட்டியது போல
ஓடி ஓடி ஓய்விலாது உழைத்த தங்கேஸ்வரி
நோயில் வீழ்ந்தார்
நடக்க முடியாத நிலை
படுக்கையிலும் வீழ்ந்தார்
எழும்ப முடியாத நிலை
எனினும் இயங்கினார்
கிடைத்த் ஓய்வு நேரங்களிலும் எழுதிக்கொண்டிருந்தார்
அவர் கடைசியாக எழுதி முடித்த
மட்டக்கள்ப்பின் சில சாச னங்கள் பட்டயங்கள் மறைக்கப்பட்ட கோவில்கள் சம்பந்தமான் நூலுக்கு என்னிடம் முகவுரை கேட்டிருந்தார்
கொடுத்திருந்தேன்
அது விரைவில் வெளி வரவுள்ளது
இயங்கா நிலை வரை இயங்கிய அசாத்திய மனவலிமை கொண்ட பெண்மணி அவர்
அவரைபோற்றுவோம்
தங்கேஸ்வரி
காலம் உனக்களித்த கடமையை உன்னால் முடிந்தவரை
அர்ப்பணிப்போடும்
உளச்சுத்தியோடும் நிறைவு செய்து
நிறைவு பெற்றாய்
இந்த நிறைவே வாழ்ந்ததன் அர்த்தம்
நான் தற்சமயம் நோர்வேயில் நிற்கிறேன்
உனது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டு உன்னைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் நாவார உரைக்க முடியவில்லையே என வருந்துகிறேன்
உனது இறுதிச் சடங்குகளின் போது என் மனம் அங்குதான் நிற்கும்
சென்று வா தங்கையே!
---------------------------------
பேராசிரியர் சி.மௌனகுரு