குரு பிரதிபா பிரபா விருதினை வென்ற குமாரசாமி தவராசா ஆசிரியருக்கு கெளரவிப்பு.

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வழங்கப்படும்  குரு பிரதிபா பிரபா விருதினை கிழக்கு  மாகாணத்தில்  அதிக புள்ளிகளைப்பெற்ற மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்  குமாரசாமி தவராசா பெற்றுக்கொண்டார்.


அண்மையில் நடைபெற்ற 2018ம் வருடத்திற்க்கான கெளரவிப்பு நிகழ்வில் இவ்விருதினை   கல்வி  அமைச்சர்  அகிலவிராஜ்  காரியவசம் அவர்கள்  வழங்கி  கொரவித்தார். 

குரு பிரதிபா பிரபா விருது பெற்று பாடசாலைக்கும் கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த குமாரசாமி தவராசா கணித பாட ஆசிரியராவதுடன் அதே பாடசாலையின் பழைய மாணவர்  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

இவர் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளுக்காக மாணவர்களை பயிற்றுவித்து பல சாதனைகளை புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்விருதானது கல்வி சேவை மற்றும் பாடசாலை பெறுபேறு, இணைப்பாட விதான செயற்பாட்டினை கருத்தில் கொண்டு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 விருதினைப் பெற்ற ஆசிரியர் கடந்த 2019.10.11ம் திகதியன்று அதிபர்  K.பகிரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
பாடசாலை ஒன்றுகூடலின்போது ஆசிரியர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.