சர்வதேச காது கேளாதோர் தினம் இன்று.


உலக காது கேளாதோர் தினம்.

சத்தம்  உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமை எனலாம்.

இன்று உலகத்தில் காது கேளாதவர்களின் எண்ணிக்கை 36 கோடி என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது .

இவர்களில் மூன்றில் இரண்டு பேர் வளரும் நாடுகளில் காணப்படுகின்றனர் எனலாம். இவ்வாறு உலகலாவிய ரீதியில் காது கேளாதோர் பல்வேறு பிரச்சினைகளுடன் தவிக்கின்ற காரணத்தினால் இவர்களுக்கு என்று சமூகத்தில் உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி 1958ம் ஆண்டு காது கேளாதோர் தினத்தை உருவாக்கியது.
பின் காதுகேளாதோர் வாரமாக (செப்டம்பர் கடைசி வாரம்) மாற்றப்பட்டது. 

சமூகத்தில் காதுகேளாதோர் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் கோரிக்கைகள் அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 


காதின் கேள்வி நரம்பின் செயற்பாட்டுக் குறைபாடு காரணமாக ஒருவருக்கு அவரது சூழலில் எழுப்பப்படும் ஒலிகளைக் கேட்பது தடுக்கப்படுமாயின் அது கேட்டல் குறைபாடு ஆகும். 

செவிப்புலணுர்வு கேள்வித்திறன் குறைவால் பேசும் இயல்பை இழந்த குழந்தை தனது கண்களால் உற்றுநோக்கி செயல்களை உணர்ந்து கொள்கிறது.

 தமது எண்ணங்களை வெளிப்படுத்த தேவைகளை பெற்றுக்கொள்ள தொடர்புகளுக்கான உடல் அசைவுகளை ஓர் ஊடகமாக கொள்கின்றது. 

0-25 டெசில் வரையான ஒலிகளைக் கேட்க முடியாதவர்களையும் கேள்விக் கருவி மூலமாகக் சரி செய்ய முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் கேட்டல் குறைபாடுடையவர்களாகக் கருதப்படுவர். இது காது முற்றாக கேளாமை அல்லது இரு காதுகளும் அல்லது இரு காதுகளும் கேளாமை அல்லது இரு காதுகளும் சராசரி அளவுக்குக் கேளாமை உடையோரும் இப்பிரிவில் அடங்குவர்.


இவ்வாறு காது கேளாதவர்களுக்கு இயக்கத்திறன் விருத்தியினூடாக கற்றல் திறன் விருத்தியினை ஏற்படத்த வேண்டும். கடைக்காப் பகுதியில் குழந்தையின் செவிப்புலக் குறைபாட்டை கேள்வித்திறன் இழப்பை பெற்றோர் எளிதாக இனங்காணமுடியும். 



குழந்தையிடம் கேள்விக் குறைபாடு காணப்படின் கண், மூக்கு, தொண்டை தொடர்பான (ENT) மருத்துவ நிபுணருடன் தொடர்பு கொண்டு மருத்துவச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் அவ்வாறு முடியாதவிடத்து கேள்விக் குறைபாடு எனக் காணுமிடத்து அக் குழந்தை மூன்று வயதிலிருந்து பேசுவதற்கான பயிற்சியை பெறுவதற்காக அதன் பெற்றோர்
கேள்வித்திறன் குறைந்தோருக்கான கல்விப் போதனையில் பயிற்சி பெற்றுள்ள ஆற்றல் உள்ள ஆசிரியர்களின் ஆலோசனைளைப் பெற்று குழந்தைக்கு பேசும் பயிற்சியையும், கல்வியையும் அளிக்க முன் வரவேண்டும்.


செவிப்புலக் குறைபாடும் பார்வை குறைபாடு போன்றவை சூழல், பரம்பரை, நோய்த்தாக்கம, விபத்து காரணமாக ஏற்படுவதாகும். 

முற்றாக செவிப்புலனற்றோர் விசேடமாக உள்ள பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள். 
ஓரளவு செவிப்புலக் குறைபாடுடையோர் பொதுக் கல்வித் திட்டத்தின் கீழ் சாதாரண பாடசாலையில் இணைத்துக் கொள்ளலாம்.


கேட்டல் குறைபாடுடையவர்களை பிரதானமாக 2 வகைகளாக நோக்கலாம்.

ஓரளவு கேட்டல் குறைபாடு (01)
60-24 னடி சாதாரண நிலை
24-40 னடி கேட்டல் நிலை
42-35 னடி ஓரளவு கேட்டல்
56-70 னடி ஓரளவை விட குறைவாக கேட்டல்
71-90 னடி மிதமாக கேட்டல் குறைபாடு

பூரணமாகக் கேட்டல் குறைபாடு (02)

பூரணமாகக் கேட்டல் குறைபாடு (profound  90)

பூரணமாக கேட்டல் குறைபாடுடையவர்களை பாடசாலைக்கு சிறுவயதிலிருந்தே அனுப்பப்பட வேண்டியவர்களாவர். 

இவர்கட்கு முற்றாக கேட்டல் திறனின்மை காரணமாக பேசவும் முடியாதிருக்கும். தொடர்பாடல் விருத்தியினூடாக இவர்களது கற்றல் திறனை மேம்படுத்த முடியும். 

இவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, சைகை மொழி போன்றவற்றின் மூலம் கற்றல் திறன் விருத்தியை எற்படுத்த முடியும்.
ஒரு பிள்ளையின் வெளித் தோற்றம், நடத்தைகள், தொடர்பாடல் போன்றன் மூலம் பிள்ளையின் செவிப்புலக்குறைபாட்டை இனங்காண முடியும். 

கேட்டல் குறைபாடுடையவர்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவு கருவிகளைப் பயன்படுத்தலாம்.செவிப்பன்னி, கேட்டல்மானி, செயற்கைகாது, கேட்கும் கருவி, சாக்லிபர்ப் மைன்ட் என்பவற்றைப் பயன்படுத்தி கேட்டல் குறைபாட்டை நிவர்த்தி செய்யமுடியும்.


கேள்வித்திறன் குறைவானவர்களின் ஒலி உணர்வை (audio metrop ) என்ற கேள்விமானிக் கருவியினால் அளவிட முடியும். 

இவர்களிடம் காணப்படும் ஒலி உணர்வை கேள்துணைக் கரவிகளின் உதவியுடன் கேட்டல் பயிற்சிகள்
(   auditory training ) அளிப்பதன் மூலம் பேசும் திறனை உருவாக்க முடியும்.

அதேபோல் கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாடுகள் எனும் போது ஆசியர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஓர் விடயமாக உள்ளது எனலாம். 

அந்தவகையில் அப்பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பங்களிப்புக்களாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தூரத்தை இயன்றளவு குறைத்தல், வகுப்பறையில் அனாவசியமான ஒலிகள் இரைச்சல்கள் தவிர்த்தல், வாய்மொழி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்குகையில் முழுமையான வாக்கியங்களையே பயன்படுத்துதல், கற்றல் செயற்பாடுகளுக்கு பல உறுப்புக் கற்றல் அணுகுமுறையை பிரயோகித்தல், பிள்ளை கேட்டல் சாதனம் பயன்படுத்தாத பிள்ளையின் அது குறித்து வழிப்படுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு துணை புரிதல், குழுச் செயற்பாடுகளில் ஈடுபடுபட வைத்தல், கட்புல ஊடகத்தை மிகையாகப் பயன்படுத்த வாய்ப்பளித்தல் போன்ற பல்வேறு விடயங்களில் அவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் மேம்படுத்துவதல் வேண்டும். 

 சமூகத்தில் காது கேளாதோருக்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். 

மற்ற மனிதர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இதனூடாக சதாரண மனிதர்களை போல் காதுகேளாதோரும் தலைநிமிர்ந்து வாழ வழியமைக்கலாம் .


கட்டுரை ஆக்கம்.




சலீம் பாத்திமா ஷர்பின்
மாணவி
நுண்கலைத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம் .