முனைப்பு நிறுவனத் தலைவர் சுவிற்சலாந்து பயணம்.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமான  மாணிக்கப்போடி சசிகுமார் கடந்த 12.09.2019 வியாழக்கிழமை சுவிற்சலாந்து நாட்டுக்கு பயணமானர். 

இலங்கை நேரம் பி.ப  09.20மணிக்கு இலங்கை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை  zurich விமான  நிலையத்தை அடைந்த தலைவர் சசிகுமார் அவர்களை விமான நிலையத்தில் முனைப்பு நிறுவன சுவிஸ் நாட்டு  பொருளாளர் வரவேற்றார்.

முனைப்பு நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்படும் கதம்பமாலை நிகவில் கலந்து கொள்வதற்க்காக சென்ற இலங்கைக்கான முனைப்பு நிறுவனத்தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார்   எதிர்வரும் 23.09.2019 தாயகம் திரும்பவுள்ளார்.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் தாயகத்தின் வடகிழக்கு பகுதியில் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்திற்க்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .