புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை –மட்டு.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவர் வைத்தியசாலையின் மேல்மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த பழுகாமம் பகுதியை சேர்ந்த 25வயதுடைய மயூரன் என்பவரே இவ்வாறு பாய்ந்து தற்கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புற்றுநோய் வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் இருந்து இவர் குதித்த நிலையில் படுகாயமடைந்து அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.