மட்டு வாலிபர் முன்னணியினால் மாவடி வேம்பு வைத்தியசாலை வளாகம் சிரமதானம்.


மட்டு வாலிபர் முன்னணியினால் மாவடி வேம்பு வைத்தியசாலை வளாகம் சிரமதானம்.

ஏறாவூர் பற்று பிரதேச மாவடிவேம்பு வைத்தியசாலை வளாகத்தில் நேற்று (13.09.2019) வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினரால்  சிரமதான பணி ஒன்று  முன்னெடுப்பு.

மட்டு வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற
வைத்தியசாலை வளாக சிரமதான பணியில் வளாகம் அழகான முறையில் துப்பரவு செய்யப்பட்ட .

 இந்த சிரமதான நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ,  வாலிபர் முன்னணி தலைவர்  கி.சேயோன் உட்பட வாலிபர் முன்னணி அங்கத்தவர்கள் , கிராம இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலை நிருவாகம் விடுத்த கோரிக்கையை மாற்றுத்திறனாளிகள் துறைசார் பொறுப்பாளர் சோபணன் வாலிபர் முன்னணியின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்க்கு  அமைவாக இந்த வேலைத்திட்டத்தை மட்டு  வாலிபர் முன்னணி முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.