தற்கொலைகள் அதிகரிக்க அரசும் காரணமா?



ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை தினமாக பிரகடணப்படுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் தற்கொலை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஒருவரின் தற்கொலையால் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தற்கொலை செய்வோரில் ஆண்களே அதிகம் எனவும் சுட்டிக்காட்டுகிறது  உலக சுகாதார நிறுவனம்   வெளியிட்டுள்ள தற்கொலை அறிக்கையில்.
2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தற்கொலை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் ஆனாலும் உலக அளவில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கை சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கிறார்கள். 
வருவாய் குறைவாக உள்ள மற்றும் நடுத்தர குடும்பத்தினரே அதிகம் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

தூக்கு மாட்டிக்கொள்வது மற்றும் கிணறு நீர்நிலைகளில் மூழ்குவது, நஞ்சருந்துவதன் மூலமே நமது நாட்டில் தற்கொலைகள் அதிகம் இடம்பெறுகின்றன.  குறிப்பாக கிராமங்களில் இந்த நடைமுறை அதிகமாக உள்ளது.

தூக்கு மாட்டிக்கொள்வது, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்வது
இவை இரண்டிலும்தான் அதிக தற்கொலைகள் வெளிநாடுகளில்  நடக்கின்றன அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

விபத்து, கேன்சர், பிற வியாதிகள் போன்றவற்றால் இறப்பதைவிட தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மனஅழுத்தம் தற்கொலைக்கு  ஒருவரை இழுத்துச்செல்கின்றது இதற்கு தனிப்பட்ட குடும்ப தொழில் பிரச்சினைகள் காரணமாக அமைந்தாலும், வறுமை ,தொழில்வாய்ப்பின்மை , கடன் போன்ற விடயங்களும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.  

 இதற்கு   அரசியல் பொருளாதார காரணிகளும் முக்கியமான தாக்கம்செலுத்தும் என்பதில் மற்றறுக்கருத்திருக்க முடியாது.

உண்மையில் இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் ஸ்தீரமற்ற நிலைப்பாடு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றமை உண்மை .  

 அரசியல்வாதிகளின் செயல்பாடுகள், இனக்குரோதமாக  வெளிப்படுத்தும் கருத்துக்கள்  என்பனவும் பாரியளவில் ஒவ்வொரு மனிதருக்கும்  மனஅழுத்தத்தை ஏற்படுத்திவருகின்றமையும் காணலாம்.