கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்துவது அப்பகுதியில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் திருச்சடங்குகளாகும்.
நவராத்திரி தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் ஆலயங்களில் திருச்சடங்குகள் ஆரம்பமாகிவருகின்றன.
மட்டக்களப்பு,பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று சனிக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
நேற்று சனிக்கிழமை மாலை பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர பாரம்பரிய முறைகளைக்கொண்டதாக இந்த அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது.ஆலயத்திpனை அம்பாள் சென்றடைந்ததும் அங்கு பாரம்பரிய வழக்கத்திற்கு அமைவாக திருக்கதவு திறக்கும் நடங்கு நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம பூசகர் த.தவராஜா தலைமையில் ஐந்து தினங்கள் நடைபெறவுள்ள திருச்சடங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
திங்கட்கிழமை மாலை அம்பாளின் சப்புரத்திருவிழா நடைபெறவுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை அம்பாளின் சக்தி மஹா யாகமும் அன்றைய தினம் பிற்பகல் நோற்பு கட்டுதலும் நடைபெற்று மாலை கடல் குளிப்பு நிகழ்வு நடைபெறும்.
புதன்கிழமை காலை அன்னையின் மிகவும் சிறப்புமிக்க சடங்கான தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.