மீளவும் பேச்சுக்கள் ஆரம்பம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் கிழக்குத்தமிழர் ஒன்றியமும் இன்று த.ம.வி.பு தலைமைக் காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் பூ.பிரசாந்தன் தலைமையில் அவர்களின் குழுவினரும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் அவர்களின் குழுவினரும் பங்குபற்றினர். 

    
 
கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் நில, நிர்வாக, நிதி ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் பாரபட்சமும் தொடர்ந்தேர்ச்சியாக நடந்தேறி வருவதையும், கிழக்கு பிரதிநிதிகள் வாய்மூடி மௌனமாக இருப்பதையும். தொடர்ந்து கிழக்கு புறக்கணிப்பிற்கு உள்ளாவதும் என பல விடயங்கள் பேசப்பட்டதுடன். வருங்காலங்களில் கூட்டாக செயற்பட வேண்டும் என கலந்துரையாடியதுடன் ஏனைய கட்சிகளுடனும் இதுபற்றி பேசுவதென தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முன்னனியை வலுவுள்ளதாக்க தொடர்ந்து கட்சிகளுடன் பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய பேச்சுக்கான அழைப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் விடுத்திருந்தனர்.
நாளை நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தலைமையிலான தமிழ் முற்போக்கு அணியினருடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ள்ர்.