கறுவப்பங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மிக மோசமாகவுள்ள வீதிகளை புனரமைக்கு பணிகளை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் உள்ள நாவலடி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மழை காலங்களில் குறித்த வீதியை மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் குறித்த வீதியை புனரமைத்து தறுமாறு பிரதேச மக்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் கறுவப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான காந்தராஜா கிராம அபிவிருத்தி திணைக்களத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதியை புனரமைப்பதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றுகாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் கறுவப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான காந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த வீதியை கொங்கிறிட் இட்டு புனரமைப்பதற்காக கிராம அபிவிருத்தி திணைக்களம் 10இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.