மாவடிவேம்பில் மஞ்சள் கோட்டினால் வீதியை கடக்க முற்பட்டவருக்கு எமனாக வந்த மோட்டார் சைக்கிள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இரவு பாதசாரி கடவை(மஞ்சள்கோடு) ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண்மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.