பேரப்பிள்ளையினை துஸ்பிரயோகம் செய்த நபர் –கிரான்குளத்தில் நையப்புடைப்பு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவரை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கிரான்குளம் கடற்கரைப்பகுதிக்கு கொண்டுசென்று குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வேளையில் அப்பகுதியில் நின்றவர்களினால் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பேரப்பிள்ளையுடன் உறவுமுறையான குறித்த சிறுமியையும் குறித்த நபர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இதேநேரம் துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.