சர்வதேச இளைஞர் தினத்தை (23.08) முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "மண்முனை மேற்கு சவால் கிண்ணம் " மாபெரும் எல்லே சுற்றுப்போட்டி இன்று நடைபெறவுள்ளது .
ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டியாக நடைபெறவுள்ள இச் சுற்றுத்தொடரில் பல அணிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் இன்று 24.08.2019 சனிக்கிழமை ஈச்சந்தீவு பொது மைதானத்தில் காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் இரண்டாம் இடங்களை பெறும் அணிக்கு
பெறுமதியான வெற்றிக்கிண்ணம்.
பெறுமதியான வெற்றிக்கிண்ணம்.
அதிக ஓட்டங்களை பெறும் வீரர், வீரங்கனைக்கு கிண்ணம்.
சிறந்த களத்தடுப்பு/விசேட திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கான கிண்ணம் என்பன வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
