பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் ஒரு விசர் நாய்களாகவே பார்க்கின்றோம் என இங்கு கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தாய்தந்தையரை இழந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
வெஸ்லோ என்னும் கிழக்கு மாகாண சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் அபய குணவர்த்தன,முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தாய்தந்தையரை இழந்த 13 சிறுவர்களுக்கு அவர்களின் வயதுகளுக்கு ஏற்றவாறு 20இலட்சத்திற்கு உட்பட்ட நிதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர்,
உலகத்தில் உள்ள அனைவரும் விரும்பும் அனைவரது வாய்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக சமாதானம் என்றும் சொல் இருக்கின்றது.
இன்று சில இடங்களில் சமாதானத்தின் சொல்லின் அர்த்தம் புரிந்துகொள்ளப்படாத நிலையில் அந்த சமாதானத்திற்கு சவால் ஏற்படும்போதே அதனை புரிந்துகொள்ளும் நிலையும் இருக்கின்றது.
ஒரு காலணித்துவ நாடுகளில் சுதந்திரம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.அதேபோன்றுதான் இந்த சமாதானமும் ஒருமைப்பாடும் இல்லாதிருக்கும்போது அங்கு எவ்வாறான சூழ்நிலையுருவாகும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
நாங்கள் இந்த நாட்டில் எந்த யுத்ததினையும் விரும்பவில்லை.அவ்வாறான நிலையிலும் பல்வேறு விதமான வன்முறைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
இலங்கை காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் அதில் இருந்து மீட்பதற்காக இந்த நாட்டில தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் இணைந்து போராட்டங்களை நடாத்தினார்கள்.அவ்வாறு அனைவரும் இணைந்து பெற்றுக்கொண்ட சுதந்திரத்தினை நாங்கள் இன்று அவற்றினை அனுபவிக்கமுடியாத நிலையில் உள்ளோம்.
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் செய்வதில்லை.ஒரு சிறிய குழுவினரே இந்த பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.இந்த செயற்பாடுகள் இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளுக்கும் தாக்கத்தினை செலுத்துபவையாக இருக்கின்றன.
இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் இவ்வாறான ஒரு சிறு குழுக்களினாலேயே பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் ஒரு விசர் நாய்களாகவே பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் கடந்த 10வருடத்திற்கு மேலாக அமைதி நிலவிவந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் என்பது இலங்கை மக்கள் பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த காரணத்தினால் இந்த நாட்டில் பல சம்பவங்கள் நடந்தேறியது.
யுத்த காலத்தில் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.அந்த உயிர்களை நாங்கள் மீள கொண்டுவரமுடியாது.அவ்வாறான சூழ்நிலை இந்த நாட்டில் என்போதும் ஏற்படக்கூடாது.