31வது முல்லை மாவட்ட விளையாட்டுப்போட்டி நாளை.







முல்லைத்தீவு மாவட்ட 31வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (04.08) யோகாபுரம் மாகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.


பி.ப 03.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


மாவட்ட விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெறுவதற்க்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், போட்டிகளில் பங்குபற்றும் போட்டியாளர்களை உரியநேரத்துக்கு கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் அவர்களினால்.