வீரமுனை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.இன்றைய தினம் தமிழ் மக்களினால் மறக்கமுடியாத தினமாகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் பெரும்பான்மையினத்திற்கு எதிராக தமிழர்களின் யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் தமிழர்கள் பெரும்பான்மையினத்தினாலும் மற்றுமொரு சிறுபான்மையினத்தாலும் பல்வேறு அழிவுகளுக்கு உள்ளானார்கள் என்பதற்கு பல்வேறு சாட்சியங்கள் கிழக்கில் நிறைந்து காணப்படுகின்றன.
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் பேசும் பல்வேறு தரப்பினரும் கிழக்கில் தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் பேசுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர்.
இந்தவகையிலேயே வீரமுனை படுகொலை தொடர்பில் கிழக்கு தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக பேசப்பட்டுவருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்றாக வீரமுனை கிராமம் இருந்துவருகின்றது.கிழக்கு மாகாணமே தமிழர்களின் பழமையான இருப்பாக காணப்படுவதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துவரும் நிலையில் வீரமுனையின் இருப்பு என்பதும் பெரும் வரலாற்றினைக்கொண்டதாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் இந்த கிராமத்தினை அகற்றி அதனை தமது பகுதியாக மாற்றுவதற்கு பல தடவைகள் முஸ்லிம் தீவிரவாதப்போக்குடையவர்களினால் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
பல்வேறு காலப்பகுதிகளில் வீரமுனை கிராமத்தினை இலக்குவைத்து முஸ்லிம் தீவிரவாதப்போக்குடையவர்களினால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதிகளில் எல்லாம் அக்காலப்பகுதிகளில் இருந்து தமிழ் இயக்கங்கள் பாதுகாப்பு அரணாக வீரமுனைக்கு இருந்துவந்தன.
எனினும் 1990ஆம் ஆண்டு இந்த நாட்டில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் இலங்கை அரச படைகளுடன் இணைந்து முஸ்லிம் தீவிரவாதப்போக்குடையவர்கள் தங்களது நோக்கத்தினை அடைவதற்கான நடவடிக்கைகளை கச்சிதமாக மேற்கொண்டுவந்தனர்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த நிலைமையினை பயன்படுத்திக்கொண்டு வீரமுனை மற்றும் வீரமுனையினை அண்டியுள்ள கிராமங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
குறிப்பாக வளத்தாப்பிட்டு,மல்வத்தை,மல்லிகைதீவு உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் அங்கு பெண்கள்,குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொலைசெய்யப்பட அங்கு எஞ்சிய மக்கள் வீரமுனையில் தஞ்சமடைந்திருந்தனர்.
வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இங்கு மக்கள் தஞ்சமடைந்திருந்த காலப்பகுதியில் தேடுதல் என்ற வாசகத்துடன் படையினரின் உதவியுடன் வரும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் சந்தேகம் என்ற போர்வையில் முகாமில் இருந்து சந்தேகத்தின் பேரில் ஆண்கள்,சிறுவர்கள் என அடிக்கடி கொண்டுசெல்லும் நிலையில் அவர்கள் திரும்பாத நிலையே இருந்துவருகின்றது.இவ்வாறு சுமார் நூற்றுக்கணக்கானோர் கொண்டுசெல்லப்பட்டு இதுவரையில் வீடு திரும்பாத நிலையே இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 08மணியளவில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு மத்தியில் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் ஆகியவற்றுக்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிறுவர்கள்,பெண்கள்,முதியர்கள் என நூற்றுக்கணக்கானோரை வெட்டியும் சுட்டும்கொன்றனர்.
குழந்தைகளை காலில் பிடித்து பாடசாலை சுவரில் அடித்து கொலைசெய்த சம்பவங்கள் பலவும் அதன்போது இடம்பெற்றுள்ளன.இந்த சம்வத்தின் போது 100க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அம்பாறை போன்ற வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர்களின் நிலை இதுவரையில் என்னவென்று தெரியவில்லை.அவர்கள் அனைவரும் சுட்டுக்கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக பின்னர் தகவல்கள் கசிந்தன.
வீரமுனை படுகொலையின்போது 155பேர் படுகொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும்போதிலும் இதுவரையில் சரியான எண்ணிகை எவராலும் வெளிப்படுத்தமுடியவில்லை.
அதன் பின்னர் வீரமுனை கிராம மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு திருக்கோவில்,தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் அகதிகளாக குடியமர்த்தப்பட்டனர்.அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் அந்த மக்களை அங்கு குடியமர்த்தி வீரமுனை கிராமத்தினையும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கும் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளையும் அபகரிக்கும் முனைப்புகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வீரமுனை மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.
அன்றைய காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தினை தோற்கடிக்க மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கோவிந்தன் கருணாகரமின் உதவியை நாடியபோது அவர் வீரமுனை மக்களை குடியமர்த்துவதற்கான கோரிக்கையினை முன்வைத்த காரணத்தினால் வீரமுனை மக்கள் மீளகுடியர்த்தப்பட்டனர்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் ஒரு பலம்பொருந்திய கிராமமாக வீரமுனை கிராமம் மிளிர்ந்துவருகின்றது.பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் படுகொலைகளுக்கும் முகம்கொடுத்த அந்த கிராமமம் இன்று அனைத்தையும் வென்று தமிழ் மக்களின் இருப்பினை பலமாக உறுதிப்படுத்திவருகின்றது.