எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தாமரைக்கேணியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஆரசாங்கம் 20ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளது.அதில் முதல்கட்டமாக 3200பேருக்கு ஏற்கனவே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.ஏனைய 16800 பேருக்கு எதிர்வரும் 30ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்களில் கிழக்கு மாகாணத்தில் 1142பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 261 பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இவற்றில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
குடந்த காலத்தில் மழைவெயில் என்று பாராது வெளிவாரி உள்வாரியென்று பாராது தமது தொழில் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.அந்தவேளையில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
புல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வேறுபாடுகள் இல்லாமல் உள்வாரிவெளிவாரி பட்டங்கள் வழங்கப்படுகின்றன.இந்த நிலையில்வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியாது.வெளிவாரி பட்டதாரிகளும் இந்த நியமனங்களுக்குள் உள்வாங்கப்படவேண்டும்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் பட்டம்பெற்ற வெளிவாரி பட்டதாரிகளும் இதுவரையில் தொழில்வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளமுடியாமல் பெரும் கஸ்டங்கள் மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.
பட்டங்களை பூர்த்திசெய்தவர்களில் வெளிவாரி உள்வாரி என பார்;க்காமல் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலைபொறுத்தவரையில் யார்வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.அது தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது கட்சி தீர்மானிக்கும்.
எமது கட்சியின் கொள்கைக்குள் மாகாணசபை தேர்தல் இல்லை.எனினும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.மாகாணசபையின் அதிகாரங்களைக்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது.எமது கட்சிசார்பாக மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாகாணசபை அதிகாரங்களை தீர்க்கமுடியாது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவே மாகாணசபை தேர்தலில்போட்டியிட கட்சி தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு அங்கமாக செயற்பட்டுவருகின்றது.இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது.
துற்போது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்பினரும் கட்சிகளை ஒன்றிணைக்கும்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பணியை செய்கின்றனர்.நாங்கள் எங்கள் கொள்கையின் அடிப்படையிலேயே இணைந்துசெல்லமுடியும்.எங்களது கொள்கையுடன் இணைந்துசெய்படுபவர்களுடன் இணைந்துசெல்ல நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.
நூங்கள் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்தால் மாபெரும் வெற்றியை ஈட்டுவோம் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் நாங்கள் கொள்கைக்கான கூட்டினையே எப்போதும் எதிர்பார்க்கின்றோம்.அரசியலுக்காக அதிகார கதிரைகளுக்காக எந்த கூட்டுக்கும் செல்ல தயார் இல்லை.