எமது உரிமையை நிலைநாட்ட இளைஞர்கள் தடுமாற மாட்டார்கள். தமிழரசு கட்சியுடன் கைகோர்ப்பர்.


தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ் நகரில் கடந்த 29.30 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது. 

அந்த வகையில் தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி, வாலிபர் முன்னணி மாநாடு சனிக்கிழமை மாலைப்பொழுது நடைபெற்றது. 

மாநாட்டில் உரைநிகழ்த்திய மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் , 

  வாலிபர்  மாநாடானது தேசிய ரீதியில் இளைஞர்களை ஒன்றிணைக்கவும், கட்சிக்கும் இளைஞர்களுக்குமிடையில் நல்லுறவை கட்டியெழுப்பவும் உதவும் என்பதில் ஐயமில்லை ,

30 வருடமாக தமிழரின் உரிமைக்காக போராடியது  இளைஞர்கள் . 

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியில் உரிமையை பெற்றெடுக்க  தடமாறாமல் தமிழரசு கட்சியுடன் இணைந்து  தமது உரிமைகளை நிலைநாட்ட  அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க கூடியதும் அதற்க்கான வாய்ப்புமிக்க சூழல் காலத்தின் கட்டளையாக எழுந்திருக்கிறது இளைஞர்களுக்கு .

உத்வேகத்ததுன் இளைஞர் சக்தியை முன் கொண்டு செல்ல தமிழரசு வாலிபர் முன்னனி களமாக அமையும் , அதற்கு களம் அமைத்து கொடுத்த  தலைவர்களுக்கும் கட்சிக்கும் தலைவணங்குவதுடன் அந்த நிலமையை  அர்த்தமாக்கிட வேண்டும்.

இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்காத,  அல்லது வழிவிடாத எந்த அமைப்பும் ஆட்சியும் நிலைத்திருக்க முடியாது.

எமது  தமிழரசு கட்சி  உணர்ச்சி அரசியல் செய்யவில்லை உரிமைக்கான அரசியலையே செய்கின்றது .

அண்மையில் எமது நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலால் உறவுகளை இழந்த, பெரிதும் பாதிக்கப்பட்ட எமது இளைஞர்கள்  வேதனையின் உச்சத்தில்  உணர்சி மிகுதியில் உள்ளனர் , அவர்களை இச் சந்தர்பத்தை பயன்படுத்தி சிலர் தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்த முனைகின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தை தமிழரசு தலைமைகள் தவறாக பயன்படுத்தவில்லை, எந்த பாதக  நிலமைக்கும் தூ ண்டவுமில்லை. 

இந்த நாட்டு ஒட்டு மொத்த மக்களின் நிம்மதிக்காகவும் இன நல்லுறவுக்காகவும் ஆக்க பூர்வமாகவே வழிப்படுத்தி  செயற்பட்டனர்.

இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்.  மட்டு இளைஞர்களையும் எமது சமுகத்தையும்  பாராட்ட வேண்டிய விடயம்,  உறவுகளை இழந்து மன வேதனையுடன் உணர்ச்சிவசப்பட்டிருந்த எந்த இளைஞனும் வன்முறையில் ஈடுபடவில்லை.

மாற்று சமுகத்தின் சொத்துகளையோ , உடமைகளையோ, மக்களையோ தாக்கவோ ,  சேதப்படுத்தவோ இல்லை  என்பது பாராட்டதக்கது.

மேலும்  சமூகவலைத்தளம், இலத்திரனியல் ஊடகங்கள்  மூலம் எமக்கெதிரான தவறான கருத்துக்கள்  பரப்பப்படுகின்றன, அச்சு ஊடகங்களும்முன்னொரு போதுமில்லாத வகையில் இன்று எமக்கெதிராக தீவிரமாக செயற்படுகின்றன.

இவைகளை  இளைய சமுதாயம் முற்றாக நம்புவதுடன் திசை திருப்ப்படுகின்றனர்  அவர்களுக்கான தெளிவூட்டல்களை எமது வாலிபர் முன்னணி வழங்கும்  தலைவர்களே கூடிய கவனம் செலுத்த  வேண்டும் .

மேலும் எதிர்காலத்தில் எமது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை அரவணைப்போம்.

  இளைஞர்களின் வேலைவாய்ப்பு,  
இளைஞர் யுவதிகளுக்கான உயர் கற்கைகள் அவற்றுக்கான வசதி ஏற்படுத்துதல்,  உயர்பதவிகளுக்கு செல்வதற்கான கற்கைகளுக்கும்  ஒத்துழைப்பு நல்குதல்,  விசேடமாக சட்ட, வைத்திய துறைகளை தெரிவு செய்வதற்க்கு வழிகாட்டுதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

  அப்போது தான் நாம் எம் உறவுகளை உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் பல இலக்குகளை அடைய வழிகோலும்.

மேலும் எமது செயற்பாடுகளை கிராமத்தின் கடைசி மனிதன் வரை விஸ்தரிப்பதுடன் அரசியல் என்பது மூத்தோருக்கும் தவறானவர்களும் செய்வது எனும் மன நிலை மாற்றப்பட்டு இளைஞர்கள் அரசியலில் வகிபாகம் பெற தலைமைகள் ஆசிர்வாதத்துடன் இளைஞர்களின் கைகளில் பொறுப்புகள் கைமாற வேண்டும் .
எமது வாலிபர் முன்னனியின் எதிர்கால செயற்பாடுகள் தனிமனித அரசியல் தான்டி கட்சியை வளர்ப்பதாக அமைய வேண்டும் .

மேலும் கல்முனை பிரதேச செயலக தர முயத்தலில் மட்டு வாலிபர் முன்னனி பூரண ஆதரவையும் ஒத்துழைப்பைபும் நல்கும்.

எதிர்காலத்தில் எமது கட்சிக்காக சமுதாய நன்மைக்காக பாடுபட்ட இளைஞர்கள் மாநாட்டில் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து   தனதுரையை நிறைவு செய்தார்.