மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா(வீடியோ இணைப்பு)

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

இராபிரானால் வழிபட்ட வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத்திணைக்களத்தினால் நேற்று இரவு சிறப்பாக நடாத்தப்பட்டது.


ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜகுருக்கள் தலைமையில் நடைபெற்றுவரும் வருடாந்த உற்சவத்தில் தம்பபூஜை,விசேட அபிசேக,ஹோம பூஜை நடைபெற்று வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து பிள்ளையார்,முருகப்பெருமான் சிவபெருமான் சகீதம் உள்வீதியுலா நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து வாகனங்களில் ஏறி வெளிவீதியுலா நடைபெற்றது.

இன்றைய உற்சவத்தில் நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மோகன்ராஜ் உட்பட பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.