முதல் சமரிலேயே முதல் சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்ட புனித மைக்கேல் கல்லூரி

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மற்றும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரிக்கு இடையிலான வெற்றியை நோக்கி மாபெரும் கிரிக்கட் சமரில் புனித மைக்கேல் கல்லூரி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


கிழக்கில் நல்லினக்கத்தினத்தை மேம்படுத்தும் வகையில் இரண்டு மாவட்டத்திற்கிடையில் சிறந்த உறவுப்பாலத்தினையும் இரண்டு பாடசாலைகளிற்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிக்கட் சமரானது
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மற்றும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையில் மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று (06) நடைபெற்றது.

இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியானது புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் முதல் தடவையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிரிக்கட் சமரினை ஆரம்பித்துவைத்தார். அத்தோடு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயர் யோசப் பென்னையா ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

அணிக்கு 50 ஓவர்களை கொண்ட இந்த கடினபந்து பந்து கிரிக்கட் சமரில்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடியதில் 40 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 102 ஒட்டங்களை பெற்ற நிலையில் மிக்கேல் கல்லூரி அணியினர் 30 ஒவர்களில் 04 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

இந்த கிரிக்கட் சமரில் சிறந்த துடுப்பாட்ட வீரனாக புனித மைக்கேல் கல்லூரியின்  ஏ.பேராளன் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்து விச்சாளராக புனித மைக்கேல் கல்லூரியின் எஸ். துஜீதரன் தெரிவுசெய்யபட்ட அதேநேரம் சிறந்த களத்தடுப்பாளர் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியின் என்.எஸ்.ஜதுர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த கிரிக்கட் சமரின் ஆட்ட நாயகனாக மைக்கேல் கல்லூரியின் ஆ. பிரிந்தவன் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.