மட்டக்களப்பில் நெசவு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நெசவு கைத்தொழிலை மேம்படுத்தி தொழில்வாய்ப்பற்ற பெண்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நெசவு தொழிற்பேட்டை ஒன்றிணை உருவாக்கி அதன் மூலம் இந்தவேலைவாய்ப்பினை
ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இந்த நெசவு தொழிற்பேட்டையினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர் து.மதன், மாநகர உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள்,அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நெசவு தொழிற்பேட்டையினை அமைத்தல் மற்றும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.