நோய்வாய்ப்படும்போது வீடு தேடி இலவசமாக வரும் அம்பியுலன்ஸ் -மட்டக்களப்பில் சேவையை தொடங்கியது

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘1990 சுகப்படுத்தும் சேவை’ மட்டக்களப்பு மாவட்டத்திலும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

சடுதியாக ஒருவர் நோய்வாய்ப்படும்போது அவருக்கு முதலுதவி வழங்கி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அவருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சுகப்படுத்தும்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரசநிலைமையின் போது 1990 சுகப்படுத்தும் இந்த சேவை கட்டணமின்றி இன்று முதல் கிழக்கு மாகணத்தில் செயற்படவுள்ளது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் 2016ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய சேவை , இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 1990 சுகப்படுத்தும் சேவை தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றினை கிராம சேவையாளர் மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல்கள் நடாத்தப்பட்டன.