நாவலடி அருள்மிகு மாரி கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் பால்குட பவனியும் சங்காபிசேகமும்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு நாவலடி அருள்மிகு மாரி கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் மண்டலாபிசேகபூர்த்தி மகா சங்காபிசேகமும் பால்குட பவனியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்துமகா சமுத்திரத்தின் பால் நாவலடியில் நீண்டவரலாற்றினைக்கொண்ட அருள்மிகு மாரி கடல்hநச்சியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிசேக பூஜைகள் நடைபெற்றுவந்தன.

மண்டலாபிசேகத்தின்பூர்த்தி தினமான இன்று ஆயிரக்கணக்கானஅடியார்கள் பங்கெடுப்புடன் மாபெரும் பால்குட பவனியொன்று இன்றுகாலை நடைபெற்றது.

கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பால்குட பவனியானது மாரி கடல்hநச்சியம்மன் ஆலயம் வரையில் நடைபெற்றது.

ஆலயத்தினை பால்குட பவனி வந்ததடைந்ததும் கடல்hநச்சியம்மனுக்கான மகா சங்காபிசேக கிரியைகள் ஆரம்பமானது.1008சங்குகளுக்கு விசேடபூஜைகள் நடைபெற்று விசேடசக்தி மகா யாகமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அடியார்களினால் கொண்டுவரப்பட்ட பால் குடங்கள் அம்பாளுக்குஅபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும்சங்காபிசேகம் செய்யப்பட்டது.

பிரதான கும்பங்கள் உட்பட் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பரிபாலன ஆலயங்கள உட்பட மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெற்றன.