மீண்டும் போராட்டத்தில் குதித்த முற்போக்கு தமிழர் அமைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை முதல் கல்முனையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு தமிழர் அமைப்பின்  பிரதேச இணைப்பாளர் யோ.ரொஸ்மன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் வரையில் தமதுபோராட்டமம் தொடரும் என இங்கு கருத்து தெரிவித்த முற்போக்கு தமிழர் அமைப்பின்  பிரதேச இணைப்பாளர் யோ.ரொஸ்மன் தெரிவித்தார்.