முனைக்காட்டில் மோட்டார் சைக்கிள் எரிப்பு – மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மாயம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
முனைக்காடு பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யார் என்று இதுவரையில் தெரியவில்லையெனவும் எதற்காக அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் தரித்து நின்றது என்பது தெரியவில்லையெனவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.