புளியந்தீவு அருள்மிகு ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான முருகன் ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு புளியந்தீவு அருள்மிகு ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய புனராவர்த்தன அஸ்ட பந்தன பிரதிஸ்டா மகா கும்பாபிசேகம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவியருகே பன்னெடுங்காலமாக அவதரித்து வேண்டுவோர் வரமருளும் அருள்மிகு ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேக கிரிரையகள் 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
நேற்று ஆலயத்தில் அடியார்கள எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் பெருமமளவானோர் கலந்துகொண்டனர்.

பிள்ளையார்,நாகதம்பிரான்,நவக்கிரகம்,வைரவர் என பல்வேறு பரிபால மூர்த்திகளைக்கொண்டதாக வள்ளி தேவ சேனாதிபதியாக மூலமூர்த்தியாக ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி எழுந்தருளி அருள்பாலித்துவருகின்றார்.
சத்யோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ த.சிவகுமாரக்குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை விநாயகவழிபாடு,புண்ணியாகவாசனம்,யாகபூஜை,பாரிவார பூர்ணாகுதி,தீபாராதனை நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தி கோபுரம் உட்பட பரிவால மூர்த்தி ஆலய கோபுரங்கள் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றன.