பொலிஸ் உத்தியோகத்தர் கொலை -சந்தேக அவர் தற்கொலைக்கு முயற்சி


2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கருணா குழு உறுப்பினர் ஒருவர் இன்று சிறைச் சாலையில் தற்கொலை முயற்சியின் காரணமாக ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடி முனைக்காடு மயானத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு குறித்த சந்தேக நபர் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது,
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு முனைக்காடு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சடலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவில் செயற்பட்டு வந்த லிங்கம் எனப்படும் இந்த ஆயுதக் குழு உறுப்பினர் நேற்று பொதுமையானது அழைத்து வரப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று பகல் சிறைச்சாலையில் உள்ள கழிவறையில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 இவர் தற்பொழுது ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.