தேசிய சுற்று சுழல் வாரம் தேற்றாத்தீவில்

உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் முகமாக தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதனை முன்னிட்டு மே30 ஆம் திகதி முதல் வரை ஜூன் 05 வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அறிவிவக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் பல நிகழ்வுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.


தேசிய சுற்று சுழல் வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சுழலில் மரக்கன்று நடும் வைபவம் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் நேற்று(01.06.2019) காலை 09.00 மணியளவில் இடம் பெற்றது.
இவ் மரக்கன்று நடும் வைபவத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் செயலாளர்  சிவப்பிரியா வில்வரெத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலகத்தின் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.