சூழற்சி முறையில் போராட்டம் தொடரும் வியாழேந்திரன் எம்.பி.

மட்டக்களப்பில் தொடர்;ச்சியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

முட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை இன்று இரவு நிறைவுசெய்ததன் பின்னர் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர்,மேல்மாகாண ஆளுனர்,அமைச்சர் ரிசாத் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தர்.

இன்று காலை தொடக்கம் இரவு வரையில் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.