மட்டக்களப்பு வாவிக்கரையில் அனைவரையும் கண் கலங்க செய்த நிகழ்வு

21ம் திகதி சித்திரை மாதமன்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த Batticaloa Early Years School (BEYS) இன் சிறுமி Aaliya வினை நினைவு கூறும் முகமாக வைகாசி 25ம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் நினைவஞ்சலி செலுத்தபட்டது.
இதனைத் தொடர்ந்து BEYS சிறார்களால் பாடல்கள் பாடப்பட்டு,  பலூன்கள் பறக்கவிடப்பட்டதுடன் விளக்குகள் மிதக்கவிடப்பட்டது.
அத்துடன் இச் சம்பவத்தில் உயிரிழந்த அனைத்து சிறுவர்களிற்காகவும் இரண்டு நிமிட  மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஆலியாவினதும் அவரது தாயாரினதும் ஆன்மா இளைப்பாறுதல் அடைய பிராத்திக்கிறோம்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய விசேட கடமைக்கான உதவி போலிஸ் அத்தியேட்சகர் திரு.எம்.ஜெயறட்ன , 
மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் திரு.எஸ்.சசிகரன், 
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோர் இனைந்து கொண்டனர்.