கூழாவடியில் பதற்றம் -பைக்குள் இருந்ததை பார்த்து அதிர்ந்த பாதுகாப்பு பிரிவினர்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் காணப்பட்ட பையொன்றில் இருந்து கமரா மற்றும் அதற்குரிய சாதனங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.

கூழாவடி பிரதான வீதியில் பை ஒன்று அநாதரவாக கிடப்பது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குண்டு செயலிழக்கச்செய்யும் பகுதியினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த பை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அப்பகுதியில் மக்கள் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு குறித்த பையை குண்டுசெயலிழக்கச்செய்யும் பிரிவினர் சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது குறித்த பையில் கமரா மற்றும் அதற்குரிய சாச்சர் மற்றும் ரிமோட் ஒன்றும் இருந்துள்ளது.

குறித்த பையை யார் அப்பகுதியில் கொண்டுவந்து விட்டுச்சென்றார்கள் என்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.