நாட்டிற்காக ஒன்றிணைவோம் -ஓய்வூதியர்களுக்கான நடமாடும் சேவை

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தில் ஓய்வூதிய திணைக்கள பிரதி பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியம்பெறுபவர்கள் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

கொழும்போன்ற இடங்களுக்கு சென்று பெறவேண்டிய சேவைகளை ஜனாதிபதியின் இந்த செயற்றிட்டம் ஊடா விரைவாகவும் தமது சொந்த இடங்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டது.