மாணவர்களை கௌரவித்த தமிழ் பகுதி அமைப்பாளர்

மட்டக்களப்பு,முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில்   2018 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண  தர பரீட்சையில் சித்திடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சு.சுதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பகுதிக்கான தலைவர் கே. ஹரிதரன் கிரி அவர்கள் கலந்துகொண்டதுடன்  வாழைச்சேனை பிரதேசசபை உபதவிசாளர் யசோதரன்,ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சி மாவட்ட தலைவரின் செயலாளர்  மற்றும்  பாடசாலைகளின் பிரதி அதிபர்களும் ஆலய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கினர்.