போரதீவுப்ற்று பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள்


(எஸ்.நவா)

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பலாச் சோலை பிரிவில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது மாவட்ட செயலக விவசாய பிரிவின் ஒருங்கிணைப்பில் போரதீவுப்பற்று விவசாய பிரிவினால் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்நிகழ்வு கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதன் போது கடந்த  மாவட்ட பொங்கல் விழா இதே இடத்தில்  நடைபெற்ற போது ஆயிரம் பலா மரங்களை நடவேண்டும் என்ற எண்ணக்கருவில் இன்று ஒவ்வொரு குடும்பத்துக்கு இரண்டு பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டது. இதில் கருணைமலை விநாயகர் வளாகத்தில் பல மரக்கன்றுகள் இத்தினத்தில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் சிறப்பதிதிகளாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த பணிப்பாளர் உத்தியோகத்தர்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.