ஜனாதிபதியின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டம் மட்டக்களப்பில்

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் முன்னெடுக்கப்படும் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்கீழ் இலத்திரனியல் கழிவுகளற்ற இலங்கை என்னும் தலைப்பிலான தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் இன்று முதல் மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இன்று காலை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கோகுலன் தலைமையில் இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசேட வாகன சேவையுடன் இந்த இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் அலுவலகங்கள் மற்றும் வீடுகள்,நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபையில் இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி ஆணையாளர் தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் வரும் வாகன சேவையில் இலத்திரனியல் கழிவுகளை வழங்கமுடியும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கோகுலன் தெரிவித்தார்.