வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் களைகட்டிய ஆங்கில திறனாய்வு போட்டிகள்.




மட்/ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் Shrkespearean English Club இனால் Talent Show 2019 கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை  வித்தியாலய நல்லையா மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில்  கல்லூரி அதிபர் திரு. க. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திரு. T. ரவி அவர்களும் கௌரவ அதிதிகளாக திருமதி சா. ரவிராஜா , பிரதிக் கல்விப் பணிப்பாளார் முகாமைத்துவம், கல்குடா கல்வி வலயம் மற்றும் திரு சி. துஸ்யந்தன். பிரதிக் கல்விப் பணிப்பாளார், திட்டமிடல், கல்குடா கல்வி வலயம் அவர்களும் சிறப்பு அதிதிகளாகா கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று 2 இற்கானா கோட்ட கல்வி அதிகாரி திரு. S. தட்சணாமூர்த்தி அவர்களும் கோறளைப் பற்றிற்கான கோட்ட கல்வி அதிகாரி திரு. N.   குணலிங்கம் அவர்களும்,  ஏறாவூர் பற்று நிகழ்ச்சி திட்டமிடல் இணைப்பாளர்  வேல்ட் விசன் திரு. R. அமுதராஜா அவர்களும் அழைப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய சேவைக் கால ஆலோசகர் ஆங்கிலம் திரு. சு. விஜயகுமார் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயாலாளர் திரு. N. நடேஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது திறமைகளை பல் வகைப்பட்ட நிகழ்ச்சிகளினூடாக வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆங்கில தின போட்டிகளில் முதன் முறையாக கல்குடா கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவானா இப் பாடசாலையின் கனிஷ்ட பிரிவு நாடகமும் மேடையேற்றப்பட்டது சிறப்பம்சமாகும்.

நிகழ்விற்கு செங்கலடி செலான் வங்கி மற்றும் வேள்ட் விசன் நிறுவனம் பல பரிசில்களை வழங்கியதோடு அனுசரணையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.