மகிழவட்டவான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட
மட்/மண்முனை மேற்கு,  மகிழவட்டவான் மகாவித்தியாலயத்தில்,  வித்தியால அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்     பாதணிகள் வழங்கி வைப்பு.

  பாடசாலை மட்ட, கோட்டமட்ட வலயமட்டங்களில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பான இடங்களைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஓட்டப்போட்டி , தடைதாண்டல் , முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்த மாணவர்களின் திறமைகளுக்கு மேலும் வலுவூட்டுவதற்காக லண்டனில் வசித்துவரும் போல் நிசாந்த் என்பவரின் ஏற்பாட்டில் எம்.சரவணபவன் என்பவரின் நிதி உதவியுடன் ரூபா 21600 பெறுமதியான 8 சோடி பாதணிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. 

அதுமட்டுமன்றி இன் நல் உள்ளம் கொண்ட அன்பர்களினால்  மாணவர்களுக்கு 2016ம் வருடத்திலிருந்து பல கற்றல் உபகரணங்களும் கிடைத்து  வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.