குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 26பேரின் சடலங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதலாளி என சந்தேகிக்கப்படுபவரின் தலையும் கால் இரண்டுமே எஞ்சியுள்ளதாகவும் ஏனைய உடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.