நாவலடியில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காயங்களுடன் குறித்த சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை வாவியில் ஓலையெடுக்கச்சென்ற வயோதிப பெண் ஒருவர் குறித்த சடலத்தினைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சுமார் 45வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தினை முதலை கடித்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடீ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.