கடுக்காமுனை குளத்தில் பயங்கரம் -காவுகொள்ளப்பட்ட உயிர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டுகுளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலைகடித்து பலியான சம்பவம் இன்று(05) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கடுக்காமுனை கிராமத்தினைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என இனங்காணப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குளத்தினை அருள்நேசபுரம், சோதன்கட்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக பாவித்துவருவதாகவும் ஆனால் முதல்தடவையாக ஒருவரை முதலைகடித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.