மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் உடல் வலுவூட்டல் நிலையத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் உடல் வலுவூட்டல் நிலையத்தின் நான்காவது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளில் உடல்நலத்தினை கருத்தில்கொண்டு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் உதவியுடன் இந்த மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தினால் உடல் வலுவூட்டல் நிலையம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் மட்டக்களப்பில் உள்ள இளைஞர் யுவதிகள் உடல் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் நான்காவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்கள்,இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது நான்காவது ஆண்டு நிறைவு கேக் வெட்டப்பட்டு ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது.